செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பெப்பர் சிக்கன்
சிக்கன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அதிலும் மிளகாய் சேக்காத பெப்பர் சிக்கன் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்.
இந்த ரெசிபியை விடுமுறை நாட்களில் செய்து ருசியுங்கள்.
வெயில் மண்டைய பொளக்குதா? எப்பேர்ப்பட்ட வெயிலையும் சமாளிக்க இதை பண்ணுங்க!
தேவையான பொருட்கள்
- சிக்கன் - அரை கிலோ
- வெங்காயம் - 1 இஞ்சி
- பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- உப்பு - தேவையான அளவு
- எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- தனியா தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- மிளகு - 3 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
படுக்கும் போது நல்லெண்ணெய்யை முகத்தில் தடவுங்க! பேரழகியாக ஜொலிப்பீர்கள்
தாளிக்க
- பட்டை - 2
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 2
- சோம்பு - சிறிதளவு
- சீரகம் - சிறிதளவு
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலந்து 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன்பின்னர் தனியா பொடி, இடித்த மிளகு, சீரகப் பொடி சேர்த்து சிறு தீயில் கிளறி விட வேண்டும்.
அத்துடன் கால் கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் சிக்கன் மென்மையாக வேகும்வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி எலும்பிச்சை சாறு ஒரு ஸ்பூன் விட்டு இறக்கிவிடலாம்.
இப்போது சுவையான செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி.