நீரிழிவு நோயாளிகள் எந்த உணவுகளை சாப்பிடலாம்?
நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சாப்பிடும் உணவுகள் சத்துக்கள் நிறைந்ததாகவே இருக்க வேண்டும். ஆகையால் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் இவற்றினை குறைத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை நிறைந்த பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளான கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், சிகப்பு அரிசி போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.
காய்கறிகளில் நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ், அவரை, ப்ரொக்கோலி, பாகற்காய் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். புரதம் அதிகம் உள்ள பொருட்களான பால், முட்டையின் வெள்ளைக் கரு, கோழிக்கறி சேர்த்துக் கொள்ளவும்.
பழங்களில் சர்க்கரை குறைவாக உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளவும். பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் செய்யப்பட்ட அரிசி எடுத்துக்கொள்ளாமல் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தவும்.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை பெரும்பாலும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |