நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் பிரச்சனை... இதை கட்டாயம் செய்யனுமாம்
நீரிழிவு நோயாளிகளுக்கு தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதையும், அதற்கான தீர்வு என்ன என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற உடலில் இருக்கும் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவின் மூலம் ரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகின்றது.
இந்நிலையில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் பிரச்சனை குறித்தும், அதற்கு நாம் செய்ய வேண்டிய சில விடயங்களைக் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
தோல் பிரச்சனை
தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள், பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், ரத்த ஓட்டத்தைக் குறைத்து வறட்சியை ஏற்படுத்தி பெரிபெரல் வாஸ்குலர் நோய் ஏற்படுகின்றது.
சரும கொலோஜனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைபடுவதால் தோல் வறட்சி ஏற்படுகின்றது.
மேலும் கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு தோல் நோயை உருவாக்குகின்றது. இதற்கு தீர்வு என்னவெனில் சருமத்தை தினமும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டுமாம்.
வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதுடன், டியோடரண்ட் சோப்புகள் மற்றும் வலுவான Body Wash-ஐ தவிர்க்க வேண்டும்.
முகத்தை தினமும் 2 அல்லது 3 முறை கழுவினால் போதும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, முலாம்பழம் போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |