காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் வரும் பாதிப்புக்கள்
தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகமாகி வருகின்றது.
இதற்காக கண்ணாடி அணிவதற்கு பதில் காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்துவது வழக்கமாகவும் இருந்து வருகிறது. ஆனால், அதனை முறைப்படி சரியாக அணிவது முக்கியம்.
ஏனெனின் காண்டாக்ட் லென்ஸை சரியாக அணியாவிட்டால் அதன் பாதிப்பு கண்களுக்கு அதிகமாக இருக்கும். கண்ணாடி அணிவதிலும் பார்க்க காண்டாக்ட் லென்ஸால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகமாகி வருகின்றது.
அந்த வகையில், காண்டாக்ட் லென்ஸ் அணியும் பொழுது என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காண்டாக்ட் லென்ஸ் அணிபவரா?
1. காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு மறந்தும் கூட தூங்கக் கூடாது. ஏனெனின் தூங்கும் பொழுது கண்களுக்குப் போதுமான ஆக்சிஜன் ஓட்டம் கிடைக்காது. இது கண்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
2. கைகளை நன்றாகச் சுத்தம் செய்த பிறகு தான் காண்டாக்ட் லென்ஸை கையால் எடுக்க வேண்டும். கைகளை கழுவாமல் எடுத்து பயன்படுத்தினால் அது கண்களுக்குள் தொற்றுக்களை கொண்டு செல்லும்.
3. காண்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் கொண்டவர்கள் கைகளில் நகம் வளர்க்கக் கூடாது. ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கையில் இருக்கும் நகம் பட்டால் காண்டாக்ட் லென்ஸ் கிழிவதற்கு வாய்ப்பு உள்ளது.
4. கிழிந்த காண்டாக்ட் லென்ஸை அணியும் பொழுது கண்களைக் குற்றி காயப்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆகவே கண்களுக்குள் கை விடும் பொழுது கவனமாக இருப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |