சுகர் இருக்கவங்க இந்த உணவுகளை சாப்பிடலாமா? இனி தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக உலகளாவிய ரீதியில் நீரழிவு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதனால் மக்கள் அனைவரும் எந்த எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எதனை சாப்பிடக்கூடாது என குழப்பத்தில் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது வயதானவர்களை விட இளம் வயதில் இருப்பவர்களுக்கு தான் சர்க்கரை வியாதி அதிகமாக தாக்குகின்றது.
நீரழிவு நோயாளர்கள் அதிகமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது.
நீரழிவு நோயாளர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தெரிந்து கொள்வோம்.
நீரழிவு நோயாளர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்
1. சப்ஜா அல்லது துளசி விதைகள் ஸ்மூதிஸ், தயிர் கலந்து அல்லது பிற உணவுகளுடன் கலந்து சாப்பிடலாம். ஏனெனின் இதில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன. அத்துடன் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிடும் உள்ளது.
2. பார்லியில் கொலஸ்ட்ராலையும் சர்க்கரை அளவையும் குறைக்கும் பீட்டா குளுக்கன் என்ற நார்ச்சத்து அதிகமாகவுள்ளது. இதனால் நீரழிவு நோயாளர்கள் சூப், சாலட் செய்து சாப்பிடலாம்.
3. ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் ஒன்றாக ஆப்பிள் பார்க்கப்படுகின்றது. இதிலுள்ள க்ளைசெமிக் குறியீடு நார்ச்சத்தை குறிக்கின்றது. மேலும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
4. நீரழிவு நோயாளிகள் உணவில் பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்து கொள்ளலாம். ஏனெனின் இதில் புரதமும், விட்டமினும், மினரலும் அடங்கியுள்ளது. மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து, சர்க்கரை அளவை சீராக்குகிறது.
5. உடலுக்கு சக்தியை தரும் ஸ்நாக்ஸ் வகைகளில் ஒட்ஸ்களும் உள்ளடங்குகின்றது. இதனை குறைவாக சாப்பிட்டாலே வயிற்றில் பசியே எடுக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |