டிரெடிஷனல் லுக்கில் டிடி.! அழகே பொறாமைப்படும் பேரழகி ஏன் பிக்பாஸ் போகல தெரியுமா?
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி, ட்ரெடிஷனல் லுக்கில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி அவரது பள்ளி பருவத்திலிருந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் “காப்பி வித் டிடி ” என்ற நிகழ்வு மூலம் மக்கள் மனதில் சிறந்த இடத்தை பெற்றுக் கொண்டவர்.
திருமணம்
டிடி திருமணத்திற்கு பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது குறைவாகவே காணப்பட்ட போதிலும் தற்போது முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இவர் பிக் பாஸ் செல்வார் என அவரது ரசிகர்களால் நம்பப்பட்ட போதிலும் சில தனிப்பட்ட காரணங்களினால் அந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டாராம்.
பொன்னியின் செல்வன் திரைப்பட விழா
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவை தொகுத்து வழங்கியுள்ள டிடி, தொடர்ந்து அவரது சமூக வலையத்தளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ் தான் இருக்கிறார்.
அந்த வகையில் டிடி, டிரெடிஷனல் லுக்கில் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.