இவ் ஆண்டு வானில் நடக்கவிருக்கும் அதிசயமான நிகழ்வு! எப்போது தெரியுமா?
இந்த ஆண்டில் வானில் நடக்கவிருக்கும் ஒரு புதிய நிகழ்வை தான் இந்த பதிவில் பார்கப்போகிறோம். இது பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரக சீரமைப்பு
சூரியக்குடும்பத்தில் பல கோள்கள் பயணம் செய்து வருகின்றது.இந்த நிகழ்வில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் வானத்தின் ஒரே பகுதியில் ஒன்றாகத் தெரியும்.
ஆனால் இவை நேர்கோட்டில் தெரியாது. இந்த நிகழ்வை நேரடியாக நாம் பார்க்கும் போது கோள்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நடனமாடுவதை போல இருக்கும்.
இந்த நிலையில் இந்த ஜனவரி மாதம் 25ம் திகதி வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்களின் சீரமைப்பு நடைபெற உள்ளது.
இது ஒரு அரிய வானியல் நிகழ்வு ஆகும். இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் பூமிக்கு இணையாக ஒரே கோட்டில் வருகின்றன. அனைத்து கிரகங்களும் சூரியனின் ஒரு பக்கத்தில் இருக்கும் போது இந்த கிரக சீரமைப்பு தோன்றும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |