Viral Video: காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட கன்று... காரை சுற்றி வளைத்து மாடுகள் செய்த செயல்
காருக்கு அடியில் மாட்டிக் கொண்ட கன்று ஒன்றினைக் காப்பாற்றுவதற்கு மாடுகள் கூட்டமாக வந்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
ஆறறிவு கொண்ட மனிதர்கள் செய்யும் சில மோசமான காரியங்களுக்கு மத்தியில் ஐந்தறிவு ஜீவன்கள் செய்யும் காரியம் பிரமிக்க வைத்துள்ளது.
சத்தீஸ்கரில் ராய்கார் மாவட்டத்தில் கார் ஒன்றினை நான்கு மாடுகள் சேர்ந்து சுற்றி வளைத்துள்ளது. எதற்காக இவ்வாறு நிற்கின்றது என்பதை யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், காருக்கு அடியில் நபர் ஒருவர் பார்க்கின்றார்.
அதில் கன்று ஒன்று காருக்கு சிக்கியுள்ளது. குறித்த கன்றைக் காப்பாற்றவே இத்தனை மாடுகள் சுற்றி வளைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கார் ஓட்டி வந்த நபருக்கு கன்று சிக்கியது தெரிந்ததா? தெரியவில்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பின்பு சில நபர்கள் குறித்த காரை தூக்கி அடியில் மாட்டிக் கொண்டிருந்த கன்றினை காப்பாற்றியுள்ளனர். குறித்த கன்றுக்கு பின்னங்காலில் அடிபட்டுள்ள நிலையில், நொண்டி நொண்டி செல்லும் காட்சியினையும் காண முடிகின்றது.
This video is from Raigarh, Chhattisgarh.
— Megh Updates 🚨™ (@MeghUpdates) December 22, 2024
When a cow's calf came under the car, the cow came running and stood in front of the car so that the car could not run away.
People rescued the calf and now it is undergoing treatment. pic.twitter.com/LYxK1SqEM9
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |