16 வயதில் அப்பாவால் Club-க்கு சென்றேன்.. மது பழக்கம் குறித்து ஓபன் டாக் கொடுத்த டிடி
தன்னுடைய 16 வயதில் Club-க்கு செல்ல என் அப்பா அனுமதித்தார் என டிடி கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி.
இவரின் தொகுப்பாளர் பயணத்தை 20 வருடங்களாக தொடர்ந்து வருகிறார்.
இவரின் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.
தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தொகுப்பாளினி பயணத்தை நிறுத்தி விட்டு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மதுபழக்கம் குறித்து பேசிய டிடி
அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், “ என்னுடைய 16 வயதில் நா கிளப்பிற்கு செல்ல வேண்டும் என அம்மாவிடம் கேட்டேன் அவர் என்னை மறுத்து விட்டார்.
பின்னர் என் அப்பா அதற்கு அனுமதித்தார். ஆனால் அன்றைய தினம் அவர் என்னை அனுமதித்தோ தெரியவில்லை. எனக்கு மது பழக்கம் இல்லை.
இதுவரையில் என்னை சுற்றி எத்தனை பேர் குடித்தாலும் நா எப்போதும் குடிக்க மாட்டேன்..” என ஓபனாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ டிடியிற்கு பின்னால் இப்படியெல்லாம் இரகசியம் உள்ளதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.