பாலிவுட் நடிகைகளையே ஓவர்டேக் செய்த டிடி: வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொகுப்பாளர்களில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளிலேயே ‘காபி வித் டிடி’ ரொம்பவே பிரபலம்.
டிடி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி20 போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தனது அபார பேச்சு திறமையால் அனைவரையும் பாராட்டை பெற்று வரும் டிடி, தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ள அவர், சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபகாலமாக பல போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.