பிக்பாஸ் சீசன் 5ல் டிடி? டிஆர்பி-க்காக பிரபல ரிவி செய்த காரியம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி முதலில் 4 சீசன்களை வெற்றிகரமாக முடிவித்துவிட்ட நிலையில் தற்போது ஐந்தாவது சீசனுக்கான வேலைகளை தொடங்கியுள்ளது.
எப்பொழுது ஜுன் மாதம் ஆரம்பிக்கும் இந்நிகழ்ச்சி கடந்த வருடம் கொரோனா காரணமாக தாமததமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் இந்த வருட நிகழ்ச்சியில், போட்டியாளர்களை முன்பே தெரிவு செய்துவிட வேண்டும் என்று பிரபல ரிவி உறுதியாக உள்ளது. காரணம் கடந்த வரும் குறித்த ரிவியால் தெரிவுசெய்யப்பட்ட சில பிரபலங்கள் இறுதி நிமிடத்தில் வராத காரணத்தினால் பயங்கரமாக சொதப்பியதோடு, வேறு பிரபலங்களை இறக்கி ஒருவழியாக நிகழ்ச்சியினை முடித்தது.
இந்நிலையில் பிரபல ரிவியிலிருந்து குறிப்பிட்ட நபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தொகுப்பாளினி டிடி க்கு முதல் அழைப்பு சென்றுள்ளதாம்.
டிடி விவாகரத்திற்கு பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவதால் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நல்ல டிஆர்பி கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் டிடி-க்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீதுதான் ஆர்வம் என்று சிலர் கூறி வருகின்றனர்.