தனுஷை கரம் பிடிக்கும் மிருணாள் தாகூர்? வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு!
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்ககூர் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் காதலர் தினத்தில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தென்னிந்தியாவின் டாப் இளம் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூரின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை மிருணாள் தாகூர்
ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.

சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'பேமிலி ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
அவர் நடிப்பில் வெளியான ’ஹாய் நானா’ திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

சம்பளம் விபரம்
தற்போது தென்னிந்தியாவின் டாப் இளம் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர் .ஹாய் நானா படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் சுமார் 3 கோடி ரூபாய் என தெரியவருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை இளம் நடிகை மிருணாள் தாக்கூர் வாங்கியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியள்ளது.

சொத்து மதிப்பு
குறுகிய காலத்திலேயே புகழ் உச்சிசத்துக்கு சென்ற மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு ரூ.,35 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு படத்துக்கு 3 தொடக்கம் 5 கோடி வரையில் சம்பளமாக பெற்று வருகின்றார்.

ஆண்டு வருமானம்
திரைப்படங்கள் விளம்பரங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலம் இவருக்கு ஆண்டுதோறும் சமார் 10 தொடக்கம் 12 கோடி வருமானம் கிடைப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இவரிடம் 30 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும், 45 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்டும் உள்ளதாம்.
அதுமட்டுமின்றி நடிகை சமீபத்தில் 2.17 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரையும் வாங்கியுள்ளார்.குறித்த தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |