தனுஷ் - நயன்தாரா வழக்கில் நீதிமன்றம் போட்ட உத்தரவு.. இறுதி விசாரணை எப்போது?
தனுஷ் - நயன்தாரா விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நயன்தாராவின் ஆவணப்படம்
நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் தான் “நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்”.
இது பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை வைக்கப்பட்டிருந்தன.
இந்த படக்காட்சிகளை உரிய அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தியதால் அவருக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில், நயன்தாரா தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு, பதில் அளிக்கும் படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |