தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவதற்கு இதுதான் காரணமா? சில ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதற்கு காரணம் தனுஷின் அம்மா, அப்பா இருவரும் ரஜினி வீட்டுக்கு செல்லும் பொழுது, அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்றும் மரியாதை கொடுக்கவில்லை என பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.
தனுஷ் ஐஸ்வர்யா
ரஜினி ஹிட் நடிகராக இருந்த கால கட்டத்தில் தனுஷின் சகோதரியின் நண்பி தனுஷை விட வயதில் மூத்த பெண்ணான ஐஸ்வர்யா தனுஷை காதலித்தார்.
ஆனால் இதை தனுஸ் ஆரம்பத்தில் விரும்பவில்லை முற்றாக நிராகரித்தார். ஆனாலும் ஐஸ்வர்யா உறுதியாக இருந்த நிலையில் வேறு வழி இல்லாமல் இருவீட்டாரும் சேர்ந்து தனுஷ் ஐஸ்வர்யா கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.
எனினும் கடந்த 2022 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது 'தனுஷ் ரஜினி வீட்டு மாப்பிளை ஆன போது சக நடிகர்கள் பார்த்து தனுஷை பொறாமை பட்டனர். ரஜினி அப்போது உச்சகட்ட சிறந்த முன்னணி நடிகராக இருந்தார்.
2004 ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர். எவ்வளவோ பிரச்சனைகள் வந்திருந்தாலும் அதை எல்லாம் தாண்டி தனுஷ் ஐஸ்வர்யா வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷின் அம்மா, அப்பா இருவரும் ரஜினி வீட்டுக்கு செல்லும் பொழுது, அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை என்றும் மரியாதை கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி சிறியதாக ஆரம்பித்த பிரச்சனை தான் இன்று விவாகரத்து அளவில் பூகம்பமாய் வெடித்துள்ளது.
இப்படி ரஜனி வீட்டில் தன் பெற்றோருக்கு மரியாதை இல்லை என்று தான் நடிகர் தனுஷ் அதே போயஸ் கார்டனில் மிகப்பெரிய ஒரு அரண்மனையை கட்டி அதில் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் உட்கார வைத்திருக்கிறார்" என்று பேசினார்.