மனைவி மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா ரவீந்தர்? சோகமான பதிவால் எழும்பிய கேள்வி
தயாரிப்பாளர் ரவீந்தர் இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்த நடிகை மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை மகாலட்சுமி
தயாரிப்பாளர் ரவீந்தர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மகாலட்சுமி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இருவருக்கும் ஏற்கனவே முதல் திருமணம் ஆகியுள்ள நிலையில், காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதில் மகாலட்சுமிக்கு மட்டும் மகன் ஒருவர் இருக்கின்றார். தனது வில்லித்தனமான நடிப்பினால் சீரியலில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நேரத்தில் தான் ரவீந்தர் மீது ஒருவர் பண மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனால் கைதான ரவீந்தர் பல போராட்டங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
மகாலட்சுமியை பிரிகிறாரா?
அதன்பின்பு உடல் நிலையில் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையிலும் அனுமுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டாவில் என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்து தனது பழைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர் ஒருவர் விவாகரத்து ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ரவீந்தர், எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது நடக்காது, அது சாத்தியமற்றது என பதிலுக்கு ஒரு பதிவு போட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |