பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக விளையாடிய ஆயிஷா திடீர் வெளியேற்றம்! என்ன காரணம்?
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக சென்ற நடிகை ஆயிஷா தீடிரென வெளியேற்றப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீரியல் நடிகை ஆயிஷா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆயிஷா.

அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.
தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தாலும் சத்யா சீரியல் தான் இவரின் அடையாளமான மாறியது. ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் அயீஷா கலந்து கொண்டார். தெலுங்கில் சாவித்ரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்தார்.

அதன் பின்னர் ஆயிஷாவிற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார். 50 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் ஈடுகொடுத்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து இவருக்கும் பேஷன் போட்டோக்ராபர் ஹரன் ரெட்டிக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியானது.
ஆயிஷா வெளியேற்றம்
இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷாபிக்பாஸ் சீசன் 9 தெலுங்கில் வைல்ட் கார்ட் என்றியில் உள்ளே சென்றிருந்தார்.

அவர் நிகழ்ச்சிக்குள் சென்றதில் இருந்து அதிரடியாக விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளாராம்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆயிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரின் வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |