தள்ளிப்போன விவாகரத்து பிரச்சினை! மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழப்போகிறாரா தனுஷ்?
தனுஷ், ஐஸ்வர்யா தனது 18 ஆண்டுகள் வாழ்க்கையை பிரிந்த நிலையில், இவர்களை சேர்த்து வைப்பதற்கு ரஜினிகாந்த் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
குழந்தைகளுக்காக ரஜினியின் பேச்சைக் கேட்டு சரியென ஐஸ்வர்யா முடிவு எடுத்தாலும், தனுஷ் தனது முடிவினை மாற்றிக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்த நிலையில் தற்போது மனம் மாறியுள்ளாராம்.
தற்போது மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால் அது நிரந்தரம் இல்லையாம். எனவே, அவர்கள் மீண்டும் பிரியவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் முன்னதாக கடந்த 6 ஆண்டுகளாகவே தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சனை இருந்த நிலைியல், பிள்ளைகள் வளரட்டும் என்று காத்திருந்ததோடு, ஒரே வீட்டில் இருந்தாலும் பேச்சு வார்த்தை இல்லாமலே இருவரும் இருந்துள்ளனர்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமும் கூட. ஆனால் அவர்கள் சேரப் போவது நிரந்தரம் அல்ல என்பது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.