தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி.. மகன்கள் யாருடன் இருப்பார்கள்?
தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வெளியாகிய நிலையில், இரண்டு மகன்களும் யாருடன் இருக்க போகிறார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
தனுஷ்- ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் தனுஷ்- ஐஸ்வர்யா.
இவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
காதலோடு நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கை கடந்த சில வருடங்களாக பிரிவோடு நகர்ந்து கொண்டிருந்தது.
இப்படியொரு சூழ்நிலையில், இவர்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என இருவீட்டாரும் முயற்சி செய்து வந்தனர்.

இருந்த போதிலும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
விவாகரத்து
இந்த நிலையில், இரண்டு வழக்கிற்கு வருகை தராமல் இருந்த காரணத்தினால் ரசிகர்கள் இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதனையடுத்து தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகள் கண்டிப்பாக மீண்டும் சேர்வார்கள் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு வெறும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

மேலும், தனுஷ்- ஐஸ்வர்யாவின் மகன்களான யாத்ராவும், லிங்காவும் பெற்றோர் மீது நல்ல புரிதலில் இரு்ககிறார்கள். எனவே விவாகரத்து நடக்கும் பட்சத்தில் அவர்கள் தாயுடன் இருந்தாலும் தந்தை தனுஷை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட மாட்டார்கள்.
தந்தையின் அரவணைப்பிலும் அவர்கள் வளர்வார்கள். முக்கியமாக தனுஷின் ஆலோசனையையும் அவர்கள் கேட்டு தங்களது வாழ்க்கையை வாழ்வார்கள். அத்துடன், தனுஷ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் இருவரும் கலந்து கொள்வார்கள். அதற்கு ஐஸ்வர்யாவும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று திரைத்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        