விவாகரத்து குறித்து பேசிய வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா தனது திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாருக்கும் அவரது முதல் தாரம் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த குழந்தைகள் தான் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர் ஆவார்.
பின்பு விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
இதில் வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வருவதுடன், சினிமாவிலும் தனது திறமையினைக் காட்டி வருகின்றார். இவரது இரண்டாவது மகள் அவரது தந்தையுடன் இருந்து வருகின்றார்.
வனிதா தனது 18 வயதிலேயே ஆகாஷ் என்பவரை 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு விஜயஸ்ரீ ஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.
பின்பு திருமணமாகி 7 வருடத்திலேயே ஆகாஷிடமிருந்து வனிதா விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். ஆகாஷிடம் இருந்து பிரிந்த பின்னர், ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார், அவரிடம் இருந்தும் 5 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
இரண்டாவது திருமணம் மூலம் வனிதாவுக்கு ஜெயனித்தா என்கிற மகள் பிறந்த நிலையில், அவர் தந்தையுடன் வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது தன்னுடைய அம்மாவை வந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
விவாகரத்துக்கு காரணம் தந்தை
இந்நிலையில் வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, அண்மையில் ஆண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பெண்கள் கொண்டாடும் ஆண்கள் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு வனிதா பதிலளிக்கையில், தான் பார்த்து வியந்த ஆண் என்றால் தனது தந்தை தான். இரண்டு குடும்பத்தையும் சாமர்த்தியமாக கையாண்ட விதத்தினை குறித்து பேசியுள்ளார். அவர் தான் சிறந்த கணவரும் என்றும் கூறியுள்ளார்.
இந்த காலத்தில் ஒரு மனைவியோடு ஒரு ஆண் வாழ்வதே மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது, என் அப்பா இரண்டு மனைவிகளுக்கும் சமமான உரிமை கொடுத்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
என் அம்மா மற்றும் பெரியம்மா இருவருமே ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் என் அப்பா தான். பொதுவாக சக ஆண்கள் போன்று போன்று இல்லாமல் ஒரே நேரத்தில் எத்தனை பிரச்சனையாக இருந்தாலும் அதகை கையாள்வார்.
என் வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும் என் தந்தை போல் இருக்க வேண்டும் என நினைத்தேன். என் சகோதரர் அருண் அப்படித்தான் இருக்கிறார். அது அமையாததால் மட்டுமே என் வாழ்க்கையில் வந்த ஆண்களுடனான உறவு விவாகரத்தில் முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |