தனலட்சுமி யோகத்தால் பணமழை கொட்டபோகும் மூன்று ராசிகள் இவர்கள் தான்!
கிரகங்கள் தனது இடத்தை மாற்றி கொள்ளும் போது 12 ராசிகளுக்கும் அதன் பலன்கள் மாற்றமடையும். இதனால் சில ராசிகளுக்கு நன்மை உண்டாகலாம் தீமை உண்டாகலாம் கஷ்டங்கள் நீங்கலாம் இப்படி பல பலன்கள் உண்டு.
அந்த வகையில் தனலட்சுமி யோகத்தால் சில ராசிகளுக்கு பணமழை கொட்டபோகிறது. செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தருபவரான சுக்கிரன் தற்போது கும்ப ராசியில் பிரேவசிக்கிறார்.
மார்ச் மாதத்தில் செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழைவதால் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் இணைப்பு தனலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது.
எந்தெந்த ராசிகளுக்கு தனலட்சுமி யோகம் கிடைக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிகாரர்கள் இந்த யோகத்தால் இது வரைக்கும் பணத்தால் இருந்த கஷ்டம் இல்லாமல் போகும்.
அதனால் யாருக்கும் பணம் உழைக்காமல் கிடைக்கப்போவதில்லை நீங்கள் உழைக்கும் உழைப்பிற்கு ஆதாயம் வீணாகாமல் உங்களிடம் கிடைக்கும்.
வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த யோகத்தால் இவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் அடுக்கடுக்காக வரும். இனி உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
தனுசு
இந்த லட்சுமி யோகத்தால் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்லா இடங்களில் இருந்து ஊக்கம் கிடைப்பதால் உங்களுக்கு பல்வேறு துறைகளை சேர்தவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
இதனால் நீங்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்வீர்கள். உங்கள் தொழிலாக இருந்தாலும் உங்கள் செல்வமாக இருந்தாலும் அதனால் உங்களுக்கு பலம் கிடைக்கபோகிறது.
ரிஷபம்
இந்த லட்சுமி யோகம் உங்களுக்கு நெருங்கிய நணபர்களை நினைவூட்ட போகிறது. அவர்களின் மூலம் நீங்கள் நல்ல அதிஷ்டத்தை பெறுவீர்கள்.
நீங்கள் துணிந்து எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுக்கு சாதகமாக தான் வரும். நிதி ரீதியாகவும் சாதகமான முடிவுகளையே தரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.