வீட்டிலேயே Detox Drink தயாரிக்கலாம்! உடல் எடையும் கடகடவென குறையும்
உடல் எடையை குறைக்க, எடையை கட்டுக்கோப்பாக வைக்க பலரும் முயற்சித்து வரும் பானம் Detox Drink.
நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை கட்டுக்கோப்பாக மெருகேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது Detox Drink.
இதனை மிக எளிய முறையில் வீ்ட்டில் உள்ள பொருட்களை கொண்டு எப்படி தயாரிப்பது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி- சிறிய துண்டு
நெல்லிக்காய்- பாதியளவு (1/2)
எலுமிச்சை- 1
புதினா- 4 முதல் 5 இலைகள்
தேன்- தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சி, நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவிட்டு நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும்.
சிறிய உரலில் தட்டிக்கூட எடுத்துக்கொள்ளவும், இதனை ஒரு லிட்டர் தண்ணீர் அப்படியே போட்டுவிடவும்.
இதனுடன் பாதியளவு எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும், கடைசியான புதினா இலைகளை சேர்க்கவும்.
இந்த கலவையை அப்படியே 10 முதல் 15 நிமிடங்கள் வைத்துவிடலாம், Detox Drinkயை அருந்தும் முன் மீதியிருந்த எலுமிச்சை சாற்றை கலந்து தேன் சேர்த்து பருகலாம்.
இதை தொடர்ந்து குடித்து வந்தால் 2 வாரங்களில் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.
Detox Drink எப்படி வேலை செய்கிறது?
இங்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நாம் தினந்தோறும் சமையலுக்காக பயன்படுத்துபவையே.
எலுமிச்சை- விட்டமின் சி, சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள எலுமிச்சை, செரிமானத்தை மேம்படுத்துவதுடன் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது.
இதுதவிர நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும், காலையில் வெறும் வயிற்றில் மிதமான சூட்டுடன் தண்ணீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிப்பது நல்லதே.
இஞ்சி- ஆயுர்வேத மூலிகைகளில் பயன்படுத்தப்படும் இஞ்சி, பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் எடை குறைய உதவிபுரிகிறது.
சளி, இருமல் தொந்தரவுகள் இருக்கும் நபர்களுக்கும் இஞ்சி சாறு சிறப்பான மருந்தாகும்.
புதினா- உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி பலநோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது புதினா.
உடற்சூட்டை குறைப்பதுடன், வயிற்றுப் புழுக்களை அழிக்கிறது, தலைவலி, தொண்டைப்புண்ணுக்கும் நிவாரணம் அளிக்கும்.