மறைந்த நடிகர் சரத்பாபுவின் நிறைவேறாத ஆசை: அவர் இறுதியாக வெளியிட்ட புகைப்படம்
கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சினிமா வாழ்க்கை
ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சரத்பாபு கடந்த 1973ம் ஆண்டு “ராம ராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில் சினிமா பயணத்தை துவங்கினார்.
தற்போது 71 வயதான சரத்பாபு இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சரத்பாபுவின் நிறைவேறாத ஆசை
கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்றைய தினம் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவர் கடைசியாக மனைவியுடன் இணைந்து எடுத்த கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் சரத்பாபுவிற்கு ஒரு நிறைவேறாத ஆசை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சரத்பாபுவுக்கு பொலிஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற ஆசை பள்ளிக்காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால், அவருக்கு கிட்டப்பார்வை பிரச்சினை உருவானதால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டதாம்.
இவருக்கு இந்த பிரச்சினை இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இன்று சரத்பாவை ஒரு பொலிஸ் அதிகாரியாக பார்த்திருக்கலாம். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இவருக்கு இப்படியொரு ஆசை உள்ளதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.