15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! எந்த நாட்டில் தெரியுமா?
இன்றைய நவீன யுகத்தில் இணையதளத்தை தவிர்த்து வாழ்க்கை நடத்த முடியாத நிலை உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
முன்னைய காலங்களில் சிறுவர்கள் சூழலில் கிடைகின்ற பொருட்களை கொண்டு விளையாடினர்கள், இன்றைய சிறுவர்கள் இணைய தளத்தில் இருந்து விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்து விளையாடுகின்றர்கள்.

மேலும் சிறுவர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்து விட்டது. இது சிறுவர்களுக்கு கல்வியில் நாட்டம் இல்லாமல் போவதற்கும், பல்வேறு குற்ற செயல்களுக்கும் முக்கிய காரணியாக அமைகின்றது.
டென்மார்க்கில் தடையா?
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், டென்மார்க் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டென்மார் நாட்டில் சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் டென்மார்க் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் பகுப்பாய்வின்படி, நாட்டில் உள்ள இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 மணி நேரம் 40 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதாக அறியப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் தனது தொடக்க உரையில் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த கவலைகள் காரணமாக,சிறுவர்களுக்கான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவை நமது குழந்தைகளின் நேரம், குழந்தைப் பருவம் மற்றும் நல்வாழ்வைத் திருடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் கரோலின் ஸ்டேஜ் ஓல்சன் கூறியுள்ளார்.

குறித்த திட்டத்தை டென்மார்க் நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் ஆதரித்துள்ளக. கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்ததை போல் டென்மார்க்கும் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |