காய்கறி எதுவும் இல்லாமல் சுவையான உணவு செய்யலாம்: ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!
ஒரு வீட்டில் சிலர் சைவம் சாப்பிடுவார்கள், சிலர் அசைவம் சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் அதற்கு காய்கறிகள் தேவைதான்.
அசைவ சாப்பாட்டை விரும்புபவர்கள் கூட இறைச்சி, மீன், முட்டை என எதையாவது சேர்த்து சமாளித்து சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சைவர்கள் காய்கறிகள் இல்லாமல் சாப்பிடவே முடியாது. அப்படியானவர்களுக்குத் தான் இந்த சூப்பர் ரெசிபி.
எந்த காய்கறிகளும் இல்லாமல் உணவு சமைக்கலாம் என்ன உணவு, எப்படி செய்வதென்று தெரியுமா?
தேவையான பொருட்கள்
- வெள்ளை சாதம் – 1 கப்
- பெரிய வெங்காயம் – 3
- பச்சை மிளகாய் – 2
- கடுகு – 1/2 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன்
- உளுந்து – 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கரமசாலா – 1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- மிளகு தூள் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
பின் அதில் பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரமசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
எல்லாம் நன்றாக வதங்கியதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெள்ளை சாதம் மற்றும் 1 ஸ்பூன் அளவு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் கடைசியாக கொத்தமல்லி போட்டு இரக்கினால் சுப்பராக லன்ஞ் ரெடி...