திருமணம் குறித்து தனது கவலையை வெளியிட்ட தீபிகா!
தற்போது எங்கு பார்த்தாலும் கனா காணும் காலங்கள் தீபிகா, ராஜாவின் திருமணம் தான் ஹொட் டோக்.
இவர்கள் இருவரும் ஒரே சீரியலில் நடித்து இப்போது திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு கலவையான விமர்சனங்கள் பல வந்தன.
இவ்வாறு இருக்கும்போது தீபிகா, வெற்றி இருவரும் திருமணத்துக்கு பிறகு ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் உரையாடியுள்ளனர்.
அந்த உரையாடலில் தீபிகா அவர்கள், “நாங்கள் வந்திருக்கும் இடத்தில் நேற்று அஜித் குமார் வந்திருந்தார்.
ஆனால், அவரை எங்களால் பார்க்க முடியவில்லை. எனக்கு அஜித்குமார் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் இங்கு வந்தது தெரிந்திருந்தால், நாங்கள் எங்கள் திருமணத்தை ஒருநாள் முன்னாடி வைத்திருக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் அஜித் குமாருடன் புகைப்படம் எடுக்காதது மிகுந்த வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.