அடேங்கப்பா.... சிம்புவுடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட தீபிகா படுகோன்? வாய் பிளந்த ரசிகர்கள்
சிம்புவுடன் நடிக்க கோடிக்கணக்கில் நடிகை தீபிகா படுகோனின் சம்பளத் தொகை குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பன்முக திறமை கொண்டவராகவும் வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர்.
இடைப்பட்ட காலத்தில் சிம்புவின் படங்கள் சரியாக ஓடாமல் இருந்தது. இதனையடுத்து, 'மாநாடு' படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். இதன் பிறகு, நடிகர் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படம் வெளியானது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. வசூல் சாதனையும் படைத்துள்ளது.
தீபிகா படுகோன் கேட்ட சம்பளம்?
இந்நிலையில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படம் உருவாக உள்ளது. இப்படத்தை நடிகர் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் மிகப் பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட உள்ளதாம். முதலில் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.
ஆனால், தயாரிப்பாளரிடம் நடிகை தீபிகா படுகோனே ரூ.30 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். இது மட்டுமல்லாமல், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் 5 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவாராம். மேலும், அவருடன் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் என்னுடன் வருவார்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டுள்ளாராம்.
இதைக் கேட்ட படக்குழுவினர் இதெல்லாம் செட்டாகாது என்று முடிவு செய்துள்ளார்களாம். இதனால், இப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறாரா இல்லையா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கப்போகிறாராம். இத்தகவல் வெளியாகி அவருடைய ரசிகர்களை அப்படியே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.