அவசர அவசரமாக நடிகை தீபிகா படுகோன் மருத்துவனையில் அனுமதி! பதறிய ரசிகர்கள்
பிரபல பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த புராஜெக்ட் கே படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் மருத்துவர்கள் பரிசோதனையில் வாயு தொடர்பான பிரச்சனை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீண்டும் ப்ராஜெக்ட் கே படபிடிப்பில் கலந்து கொண்டார் தீபிகா படுகோன்.
இந்நிலையில், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாள் இரவில் அவருக்கு அசவுகரியமாக இருந்ததாகவும் இதய துடிப்பு அதிகரித்துக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பின் தீபிகா இப்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இத் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியிலேயே ஆழ்த்தியிருந்தது.