நண்பன் காதலனாய் மாறியது எப்படி? கனா காணும் காலங்களிலும் ஒரு ரியல் ஜோடி
கனா காணும் காலங்கள் அனைவரது மனதையும் கவர்ந்த ஒரு சீரியலாகும். கடந்த 2000ஆம் ஆண்டில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்.
பள்ளிக் காலத்தை மையமாக வைத்து எடுத்த சீரியல் என்பதால் இந்தத் தொடர் பல சாதனைகளைப் படைத்தது மட்டுமில்லாமல், அதில் நடித்த பலரது வாழ்வையும் மாற்றியது என்று கூட சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீசன் 2 டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகியது. இதில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபிகா.

கதையின்படி தனது நண்பனையும் காதலனையும் இணைத்துவைக்க இவர் செய்யும் செயல்கள் அனைவரையும் கவரத் தவறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு திருமணம் என்ற செய்தி வெளியாகியது. அதிலிருந்து இவரது காதலன் யார் என்ற ஆர்வம் அனைவருக்கும் எழுந்தது. இருப்பினும் அவர் தனது காதலன் யார் என்பதைக் கூறாமலே இருந்தார்.
கடைசியில் பார்த்தால் கனா காணும் காலங்களில் தீபிகாவின் நண்பனாக நடித்த ராஜா வெற்றி பிரபுவுடன்தான் அவரது என்கேச்ட்மென்ட் நடந்து முடிந்துள்ளது.
இதனை அதிகாரப் பூர்வமாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.