ஷமி காலைத் தொட்டு கும்பிட்ட சாகர்!மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் முகமது ஷமியின் காலை தொட்டு வணங்கிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 8-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
Caption this 🤔#IPL2021 #PBKSvCSK #CSK #PBKS pic.twitter.com/zVW1TgEcAW
— Cricbuzz (@cricbuzz) April 17, 2021
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டி ஆரம்பிக்கும் முன் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடும் முகமது ஷமியின் காலைத் தொட்டு, சிஎஸ்கே வீரர் தீபக் சாகர் வணங்கினார்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.