இந்த நாட்களில் கடன் வாங்கவே கூடாதாம்! மீறி வாங்கினால் ரொம்ப கஷ்டப்படுவீங்க
நாம் மற்றவர்களிடம் சில தருணங்களில் பொருட்கள், பணம் இவற்றினை கடனாக பெறுவதும் இவற்றினை அவ்வப்போது திருப்பி கொடுப்பது என்பது சாதாரண விடயமே.
ஆனால் சில குறிப்பிட்ட தினங்களில் நாம் அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டுமாம். அவை என்ன கிழமை என்பதையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எந்த கிழமைகளில் கடன் வாங்க கூடாது?
அஸ்தம் நட்சத்திரம் வரும் நாள்களில் மறந்தும் கடன் வாங்கக் கூடாது. இத்தருணத்தில் வாங்கினால் கடன் வளர்ந்து கொண்டே செல்லும்.
செவ்வாய் அன்று கடன் வாங்கவே கூடாது. ஆனால் அன்றைய தினம் கடன் அடைக்கலாம்.
ராகு காலம், எமகண்டம் மாதிரி குளிகை நேரத்தில் கடன் வாங்கவே கூடாதாம். அப்போது வாங்கும் கடன் ஒருநாளும் அடையாது. ஆனால் குளிகை நேரத்தில் திருப்பி கொடுப்பது நல்லது. சீக்கிரம் கடன் அடையும்.
சில திடீர் செலவுகளான மருத்துவ செலவு, உயிர் தொடர்பான பிரச்சனைக்கு என நாள், கிழமை பார்க்காமல் கடன் வாங்கி விட்டால் தவறாமல் பரிகாரம் செய்துவிடுங்கள்.
பரிகாரம் என்ன?
தொடர்ந்து 16 செவ்வாய் குறித்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மாவு, கொஞ்சம் நாட்டு சர்க்கரை, 2 ஏலக்காய் தட்டி போட்டு, இதனை பிரசாதமாக பிள்ளையாருக்கு படைத்துவிட்டு, பின்பு எறும்புகளுக்கு தானமாக கொடுக்கவும்.
பின்பு விநாயகரிடமும், மகாலட்சுமியிடமும் மனம் உருகி வேண்டிக்கொண்டால் பிரச்சினை நீங்குமாம்.