40 வயதிலும் குறையாத அழகு... பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி!
தொகுப்பாளினி டிடி செம ட்ரெண்டியான உடையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார்.
இவரின் இந்த குணத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார்.இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் காஃபி வித் டிடி தான்.
இது அவரின் அடையாளமாவே மாறியது. இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை டிடி நிரூபித்து வருகின்றார்.
தற்போது 40 வயதை கடந்துள்ள டிடி இந்த தீபாவளிக்கு அசத்தல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |