வாத்தி இசை வெளியீட்டு விழாவிலிருந்து டிடி பகிர்ந்த அந்தவொரு புகைப்படம்! வைரலாகும் கோரிக்கை
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் டிடி நிகழ்ச்சி இயக்குநரிடம், தனுஷ் ரசிகர்களுக்காக ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மீடியாத்துறைக்கு அறிமுகம்
சுமார் 25 வருடத்திற்கு மேல் தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் டிடி எனும் திவ்ய தர்ஷினி.
இவரின் திறமையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டிய ஷோ என்றால் அது கோபி வித் டிடி தான்.
இந்த ஷோவால் பல முக்கிய பிரபலங்களை பேட்டியெடுத்து மீடியாத்துறையில் தடம்பதித்துக் கொண்டார்.
இந்நிலையில் இவர் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பின்னர், உடல்நிலையில் சில தொந்தரவுகள் ஏற்பட முக்கியமாக ஷோக்களை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இசை வெளியீட்டு விழாவில் டிடி
தனுஷ் நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.
இந்த திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது என்பதுடன் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார்.
இந்நிகழ்வில் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
டிடியின் கோரிக்கை
இந்த சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ சுமார் 5 மணி நேரம் நின்றுக் கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது எனக்கும் மட்டுமல்ல சக தொகுப்பாளர்களுக்கும் சாதாரண விடயமில்லை. எனவே தொகுப்பாளர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்களும் டிடியின் கருத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.