தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்!

India Mumbai
By Vinoja Aug 06, 2026 08:00 AM GMT
Report

Daughters attend father’s funeral on video call : மும்பையைச் சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தாவின் வாழ்க்கை முழுவதும் அவரது மூன்று மகள்களைச் சுற்றியே அமைந்திருந்தது.

அவர்களை வளர்ப்பது, நல்ல கல்வி அளிப்பது, வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்வது, திருமணம் செய்து வைப்பது என தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மகள்களுக்காகவே அர்ப்பணித்தார்.

குப்தாவுக்கு மூன்று மகள்கள். அவர்களில் இருவர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். மூவருக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் தங்களது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்! | Daughters Watch Fathers Funeral Via Video Call

Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம்

Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம்

ஒரு காலத்தில் மனைவியுடன் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த குப்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார். அதன்பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்

நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார் குப்தாவின் மறைவு குறித்து மும்பை, நேபாளம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வந்த அவரது மூன்று மகள்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகம் தகவல் தெரிவித்தது.ஆனால், நேரில் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்க தங்களுக்கு முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனால், தந்தையின் இறுதி நிகழ்வில் அவர்கள் நேரடியாக கலந்துகொள்ள முடியாமல், காணொளி அழைப்பு மூலம் தொலைவில் இருந்து பங்கேற்றனர்.முதியோர் இல்ல நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் சிவ்சரணின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த் குமார் கூறுகையில்,

“சிவ்சரண் தனது மகள்களுடன் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்தார்.அவரிடம் ஒரு செல்போன் இருந்தது. அதன் மூலமாகவே மகள்களுடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு, மகள்களின் தொலைபேசி அழைப்புகள் குறைந்து, பின்னர் முற்றிலும் நின்றுவிட்டன. சிவ்சரணின் உடல்நிலை மோசமடைந்து வருவதை அவரது இறப்புக்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே மகள்களிடம் தெரிவித்தோம்.

அவரை வந்து பார்க்குமாறும் கூறினோம். ஆனால், அவர்களால் வர முடியவில்லை. அவர் உயிரிழந்த பிறகு, மீண்டும் மகள்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் சோனிபட் வந்தால் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக தெரிவித்தோம்.

என் புள்ளைக்கு 10 லட்சம் சம்பளம்.. ஆனா நா முதியோர் இல்லத்தில்: நடிகரின் கண்ணீர் பேட்டி

என் புள்ளைக்கு 10 லட்சம் சம்பளம்.. ஆனா நா முதியோர் இல்லத்தில்: நடிகரின் கண்ணீர் பேட்டி

ஆனால், பயணம் செய்து வருவதற்கு தங்களுக்கு நேரமில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர். பின்னர், அவர்கள் வீடியோ அழைப்பு மூலம் இறுதிச் சடங்கில் இணைந்தனர்” என்றார். நேபாளத்தில் ஆசிரியராக பணியாற்றும் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை முறையாக நடத்துமாறு கேட்டுக்கொண்டு, அதற்காக இணையவழியில் ரூ.5,100 அனுப்பினார்.

தகனச் சடங்கு முடிந்த பிறகு, நிகழ்வின் காணொளிகளை தங்களுக்கு அனுப்புமாறும் மகள்கள் கேட்டுக்கொண்டனர். இறுதிச் சடங்கு நடைபெறும் நேரத்தில், அவர்களில் ஒருவர், “இதற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எங்களுக்கு சாப்பிடவும் குளிக்கவும் வேண்டியுள்ளது” என்று கேட்டதாக நிர்வாகி தெரிவித்தார்.

முதலில், தந்தையின் அஸ்தியை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடும்பத்தினர் கேட்டிருந்தனர். ஆனால், பின்னர் சோனிபட் நகருக்கு நேரில் வர இயலாது என்று கூறிய அவர்கள், அந்த அஸ்தியை கங்கை நதியில் கரைத்துவிடுமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர்.

வாழ்நாள் முழுவதும் மகள்களின் எதிர்காலத்திற்காக உழைத்த ஒரு தந்தையின் இறுதி பயணம், அவர்களது நேரடி வருகையின்றி முடிவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US