காதலனுடன் சென்ற மகள்: பெற்றோர்கள் நடுரோட்டில் செய்த காரியம்! திகைத்து நின்ற பொலிஸ்
காதலித்த காதலனுடன் மகள் சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத பெற்றோர், பொலிசாரின் வாகனத்தின் முன்பு விழுந்து புரண்டு கதறிய சம்பவம் காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு பொலிசாரிடம் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்துள்ளனர். புகாரை விசாரித்த பொலிசாரிடம் குறித்த பெண் தனது காதலனுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார்.
பொலிசாரும் இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்பதால், சட்டப்படி அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என்று நீதிபதியும் கூறியுள்ளார்.
இந்நிலையில் காதலனுடன் மகள் செல்லவே அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத பெற்றோர், மகளை தன்னுடன் வரக்கோரி அவர்கள் சென்ற பொலிசார் வாகனத்தின் முன்பு, படுத்து உருண்டு கதறி அழுதுள்ளனர்.
செய்வதறியாது திகைத்த பொலிசார் திருமணமான ஜோடிகளை வேறொரு காரில் அனுப்பி வைத்ததோடு, குறித்த பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
