செயற்கை இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்க? அப்போது இது உங்களுக்காக..
பொதுவாக தற்போது இருப்பவர்கள் சர்க்கரை நோய் மற்றும் உடல் நிலையில் ஏதாவது கோளாறு வந்து விடும் என்ற பயத்தில் சர்க்கரையை உணவில் சேர்த்து கொள்வதனை குறைத்து கொண்டு வருகிறார்கள்.
இந்த தீர்மானத்தினால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் உடல் வீக்கம் அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்து கொள்கிறார்கள்.
சர்க்கரைக்கு பதிலாக இவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என தேடி பார்த்த போது தான் ஒரு உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது சர்க்கரைக்கு பதிலாக ர்டிபிஷியல் ஸ்வீட்னர் எனப்படும் செயற்கை இனிப்பு எடுத்து கொள்கிறார்கள்.
செயற்கை உப்பை கேக், கடைகளில் விற்கும் இனிப்புகள், சோடா ஆகிய பொருட்களில் சேர்க்கிறார்கள்.

இவ்வாறு எடுத்து கொள்வதால் அவர்களின் டயட் பாதிக்கப்படாமல் இருக்கின்றது என நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் முற்றிலும் தவறான ஒரு மனநிலையாகும்.
அந்த வகையில் செயற்கை இனிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
செயற்கை இனிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள்

1. டைப் 2 நீரிழிவை ஏற்படுத்தும்.
2. உயர் இரத்த அழுத்தம் என்னும் ஹை. பிபி உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
3. மாரடைப்பு
4. இதய செயலிழப்பு ஏற்படும்.
5. காலப்போக்கில் உடல் பருமன் அதிகரிக்கும்.

செயற்கை சர்க்கரைக்கு பதிலாக பழங்கள், திராட்சை, பேரீச்சம்பழம், பிற உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிப்பு நிறைந்த பழங்கள் சாப்பிடுவதில் அக்கரையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.