ஆபத்தான உணவுகளால் மரணமும் ஏற்படலாம்... கவனம்!
பொதுவாக நாம் உணவை சமைத்துதான் உண்போம். உணவு என்பது எமது உடல் நலனில் மிகவும் தாக்கம் செலுத்துகிறது.
அதே வேளையில் சில உணவுகளை சமைக்காமல் உண்ணும்போது அது எமது உடலில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்குவதோடு, உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறான சில உணவுகளை பார்ப்போம்.
கசப்பான பாதாம்
ஹைட்ரஜன் சய்னைட் எனப்படும் ஒருவகை நச்சு கலவை இந்த கசப்பான பாதாமில் உள்ளடங்கியுள்ளது. இந்த பாதாமை அதிகமாக நுகர்தல் கூட மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.
உருளைக்கிழங்கு
சோலனேசி எனப்படும் ஒருவகை கலவையானது இதில் அதிகம் காணப்படுகிறது. இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதை 450 கிராமுக்கு மேல் பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டால் மரணம் கூட ஏற்படலாம்.
பழுப்பு அரிசி
ஆர்சனிக் செறிவை அரிசி அதிகமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக பழுப்பு அரிசியில் இது அதிகமாகக் காணப்படுகிறது. இதை அதிகளவில் உண்டால் நரம்பு மண்டலத்துக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
ஜாதிக்காய்
மைரிஸ்டிகின் எனப்படும் ஒரு வித கலவை இதில் இருப்பதால், இதை அதிகமாக சாப்பிடும்போது வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் இது திடீர் மரணத்தை ஏற்படுத்தவும் கூடும்.