பொடுகு பிரச்சினையால் தொடர்ந்தும் உங்கள் முடி உதிர்ந்துக் கொண்டே இருக்கிறதா? இனி வாரத்தில் இரண்டு தடவை பயன்படுத்தி பாருங்கள்!
தற்போது ஆண், பெண் இருபாலாருக்கும் தலைமுடியை பாதுகாப்பதற்கும் பெரும் சிரமப்படுகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதிக ஆண்களுக்கும் பொடுகு தொல்லையால் தங்களின் முடிகளை இழக்க நேரிடும்.
சிலருக்கு பரம்பரை, சீரற்ற உணவு முறை, முறையாக முடியை பராமரிக்காமை போன்ற காரணங்களால் அதிக பொடுகும், முடி உதிர்வும் ஏற்படுகிறது.
விளம்பரங்களில் வரும் நடிகை, நடிகர்களைப் போல நாமும் விதம் விதமான சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வீட்டில் பயன்படுத்த தொடங்கினால் அதுவும் பலனளிக்கவில்லை.
இதற்காக நீங்கள் வீட்டிலே சிறந்த கை வைத்தியம் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள் இரண்ரே வாரத்தில் பொடுகு பிரச்சினையும் முடி உதிர்வு பிரச்சினையும் இல்லாமல் போகும்.
செய்முறை
சுத்தமான தேங்காய் எண்ணெய் இரண்டு கரண்டியும் அரை கரண்டி எலுமிச்சை சாற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் 2 கரண்டி தயிர் சேர்த்து மூன்றையும் நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.
பாவனை முறை
கலவையை குளிக்கப் போவதற்கு அரை மணி நேரம் முன்பு தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் மயிர் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவும். அரை மணி நேரம் கடந்ததும் சீயக்காய் தேய்த்து தலையை அலசவும்.
எலுமிச்சையும் தேங்காய் எண்ணெயும் ஒன்று சேரும்பொழுது கிடைக்கும் பலன்கள் ஏராளமானவை. இது பொடுகு பிரச்சனையை முற்றிலும் தீர்ப்பதோடு வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.