Night Hotel Room கதவ தட்னாங்க... மனம் திறந்த பிரபலம்!
நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் பிரபுதேவா உட்பட பலருடன் பணியாற்றி இருக்கும் டான்ஸர் பிரியங்கா, தான் வெளியில் ஷோக்களில் நடனம் ஆட சென்றபோது தமக்கு நடந்த சில வலிமிகுந்த அனுபவங்களை பிரபல ஊடகம் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி பிரியங்கா குறிப்பிடும்போது,
பெண் நடனக் கலைஞர்களை அழைத்து இடுப்பை வளைத்து ஆடு எனச் சொல்வது.
ஆடும்போது இவங்களுக்கு பத்துரூபாய் போடலாம் என்று சொல்லி அந்த நடன கலைஞர்களின் காதில் விழுமாறு பேசுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
இதேபோல் நடனமாடும் போது ஒருவர், தன் மீதே கை போட்டு விட்டதாகவும் குறிப்பிடும் பிரியங்கா அந்த நேரத்தில் தன்னால் ரியாக்ட் பண்ண முடியாது என்பதால் ஷோ முடிந்துவிட்டு அதுபற்றிய குற்றச்சாட்டை முறையான நபரிடம் முன் வைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேசமயம் தன்னுடன் நடனமாடும் ஆண்களுடன் சென்று நடனமாடும் நிகழ்ச்சிகளுக்காக தங்கும்போது, அந்த இடங்களில் ரூம் கதவை வந்து தட்டினார்கள் என்று குறிப்பிடும் பிரியங்கா, ஒரு பெண் தனியாக இருந்தால் நிச்சயம் அவர்களிடம் கஷ்டம் தான் என்று குறிப்பிடுகிறார்.