DJD-ல் அப்பாவுக்காக உயிரை பணயம் வைத்த இளைஞர்.. லட்சக்கணக்கில் கொடுத்து உதவிய சினேகா
DJD-ல் தன்னுடைய அப்பாவின் உயிரை காப்பாற்றுவதற்காக இளைஞர் எடுத்த முயற்சியை பார்த்து வியந்து போன சினேகா லட்சக்கணக்கில் கொடுத்து உதவ முன் வந்துள்ளார்.
Dance Jodi Dance
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Dance Jodi Dance.
இந்த நிகழ்ச்சியை இதுவரை காலமும் தொகுப்பாளர் விஜய் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த சீசனில் விஜே மணிமேகலை மற்றுமொரு தொகுப்பாளராக இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
அத்துடன் Dance Jodi Dance நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இருவரும் இருந்தார்கள். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
உயிரை காப்பாற்றிய சினேகா
இந்த நிலையில், Dance Jodi Dance நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் தங்களின் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், நிகழ்ச்சியில் உயிரை பணயம் வைத்த ஆடிய இளைஞரின் நடனம் அரங்கத்தினர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தன்னுடைய அப்பாவின் மருத்துவ தேவைக்காக பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதனை நடனம் ஆடி முடித்த பின்னர் அனைவரும் பார்க்க குறித்த இளைஞர் கூறும் பொழுது அவருடைய அப்பாவும் உடல் நிலை சரியில்லாமல் அங்கு வந்திருந்தார்.
குடும்பத்திற்காக போராடும் இளைஞருக்காக மருத்துவ செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான பணத்தையும் தருவதாகவும் சினேகா கூறியுள்ளார். கிட்னி கிடைத்தவுடன் கூறிய அனைத்தும் கொடுக்கப்படும் என்றும் பேசியிருக்கிறார்.
இப்படியாக ப்ரோமோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது. காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், குறித்த இளைஞருக்கு அவர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |