இந்த தவறுகளை செய்யாதீங்க... சிறுநீரக பிரச்சனை ஏற்படுமாம்
சிறுநீரக கற்கள் உருவாக நாம் செய்யும் தவறுகளும், அதனை சரிசெய்ய இருக்கும் தீர்வுகளையும் குறித்து தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக கல்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மனிதர்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
பொதுவாக சிறுநீரக கல் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணமே போதுமான அளவு தண்ணீர் அருந்தாது தான். தேவையான அளவு தண்ணீர் நாம் எடுத்துக் கொள்ளாத போது சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புக்கள் அடர்த்தியாக படிகங்களாள மாறி கற்களாக உருவாகின்றது.
நாள் ஒன்றிற்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும். போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளும் போது, சிறுநீரும் பிரச்சனை இல்லாமல் வெளியேறும்.
இதனால் தாதுக்கள் மற்றும் உப்புகள் வெளியேற்றப்படுகின்றதால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயம் குறைகின்றது.
மேலும் சில தவறுகள்
நாம் உணவில் அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்வதும் சிறுநீரகத்தில் கல் ஏற்பட காரணமாக இருக்கின்றது. நாள் ஒன்றிற்கு 5 கிராம் அளவிற்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது. மேலும் துரித உணவு, சிப்ஸ் போன்ற உணவையும் தவிர்க்க வேண்டும்.
ஆக்சலேட் நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதும் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுத்துமாம். ஆதலால் ஆக்சலேட் நிறைந்த உணவுகளான தக்காளி, கீரை, பாதாம், நட்ஸ் வகைகள், சாக்லேட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, தேநீர் போன்ற உணவை குறைவாக எடுக்கவும்.
தசை வளர்ச்சிக்கு அவசியமான புரதச்சத்தை அதிகளவு எடுத்துக் கொண்டால் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படும். ஆதலால் சிறுநீரில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் சிவப்பு இறைச்சி, முட்டை போன்ற புரத உணவை குறைத்துக் கொள்ளவும்.
சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதும் சிறுநீரக கல் உருவாக காரணமாக இருக்கின்றது. அதிக சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள், காஃபின், கார்பனேட்டட் பானங்களை தவிர்க்கவும்.
அதிக உடல் எடை கொண்டவர்கள், தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் சிறுநீரக பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |