உலக அழகி ஐஸ்வர்யா கூட மேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா?
உலகழகி மற்றும் நடிகை ஐஸ்வர்யாவின் மேக்கப் இல்லாத பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படங்கள்
பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்கள் மேக்கப் போட்டு தங்களை அழகாக காட்டுவதில் தான் அதிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் மேக்கப் இல்லாமல் நடிகைகளின் முகத்தை பார்ப்பது கடினம்.
அப்படி இருக்கையில் உலகழகி மற்றும் இந்திய நடிகையான ஐஸ்வர்யாவின் பழைய மேக்கப் இல்லாத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் தற்போது இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரை உலகிற்கு ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார்.
உலக அழகியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றினார். அந்த வகையில் அவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |