நீரிழிவு நோயாளிகளுக்கு மிளகு செய்யும் அற்புதம்! உடல் எடையும் தாறுமாறாக குறையுமாம்
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருப்பு மிளகு குறைவான கலோரிகளை கொண்டதுடன், வைட்டமின்கள், நல்ல கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகமாக காணப்படுகின்றது.
கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்
கருப்பு மிளகு நம்முடைய செரிமானத்திற்கு அதிகமாக உதவி செய்வதுடன், வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை மிளகும் வெளியிடுகிறது.
இதன் காரணமாக நம் உண்ணும் புரதங்கள் உடைக்கப்பட்டு குடல் சுத்தமாகின்றது... மேலும் இரப்பை மற்றும் குடல் சார்ந்த நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.
பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பிரச்சனையான மலச்சிக்கலை முற்றிலும் தடுக்கின்றது. கருப்பு மிளவை கிரீன் டீயில் போட்டு அருந்தினால் எடை இழப்பு ஏற்படும்.
கீழ் வாதத்தினை தடுக்கும் ஆற்றல் கொண்ட மிளகு மேலும் மூட்டு, முதுகெலும்பு வலிக்கு வலிநிவாரணியாகவும் செயல்படுகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தருகின்றது.
முக்கியமாக உடம்பில் கொழுப்பைக் குறைப்பதுடன், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. சளி பிரச்சினைக்கு முக்கிய தீர்வு அளிப்பதுடன், மறதி மற்றும் மூளைக்கோளாறு பிரச்சினையையும் தடுக்கின்றது.