டி.இமானின் வாழ்க்கையில் விளையாடினாரா சிவகார்த்திகேயன்? முதல் மனைவி கொடுத்த ஷாக் நியூஸ்!
நடிகர் சிவகார்த்திகேயன் மீது இமான் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக இமானின் முதல் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இமானின் குற்றச்சாட்டு
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான்.
இவர் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.
திரைப்படங்கள் ஹீட்டாகுவதை விட அந்த திரைப்படங்களில் வெளியாகிய பாடல்கள் பெரியளவு ஹீட் கொடுத்தது.
இந்த நிலையில் கடந்த சில காலமாகவே சிவகார்த்திகேயன் படத்துக்கு இமான் இசையமைக்கவில்லை. இது குறித்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இப்படியொரு நிலையில், டி.இமான் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இமான் பேசிய விடயம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது.
அதில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு இவர் தான் காரணம் என்றும் ஓபனாக பேசியுள்ளார்.
மனைவி கொடுத்த விளக்கம்
இதனை தொடர்ந்து இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இமானின் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, “ "எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன்.
அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையாகவே இருப்பார். என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும்.
இந்த நிலையில் எனக்கும் இமானுக்கு சண்டைகள் இருந்தன. அதற்கு சிவா நல்லது தான் கூறினார்.
இதனை தொடர்ந்து யாருக்கும் அவர் சர்போர்ட் செய்யவில்லை என்பதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதை வெளியில் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள்.” என கவலையாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் “ சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் செய்வாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |