பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் டி இமானின் முன்னாள் மனைவி.... தீயாய் பரவும் தகவல்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.
பிக் பாஸ் 6 ஆவது சீசன் விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.
ஏழரை சனியிடம் தப்பிக்க நாளை மறுதினம் 12 ராசியும் இத செய்யுங்க! இது சக்திவாய்ந்த பரிகாரம்
இந்நிலையில் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்ஸ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
டி இமானின் சமூக வலைத்தள பதிவுகளுக்கு பதிலடி கொடுத்து வரும் மோனிகா தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளார்.
குக் வித் கோமாளி ஸ்ருதிகாவுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகனா? ஷாக்காகிடாதீங்க....!
குறிப்பாக டி இமான் தனது இரண்டாவது மனைவியின் மகளை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக் கொண்டதாக கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள மோனிகா ரிசார்ட்ஸ், இரண்டு நாய்க் குட்டிகளை தன் மகள்களாக ஏற்றுக் கொண்டதாக கூறியது அதிரடியாக இருந்தது.
இந்த நிலையில் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட்ஸ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.