ஏழரை சனியிடம் தப்பிக்க நாளை மறுதினம் 12 ராசியும் இத செய்யுங்க! இது சக்திவாய்ந்த பரிகாரம்
சனி ஜெயந்தி என்பது சனி பகவான் பிறந்த நாளாகும்.
இந்து நாட்காட்டியின் படி, சனி ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தின் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சனி ஜெயந்தி நாளானது மே 30 ஆம் தேதி வருகிறது.
சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய்! விரிவான விளக்கங்களுடன்
இந்த ஆண்டு சனி ஜெயந்தி நாளில் தான் வட சாவித்திரி விரதமும் வருகிறது.
இதனால் இந்த ஆண்டில் வரும் சனி ஜெயந்தி இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளில் ஏழரை சனியிடம் இருந்து தப்பிக்க ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருட்களை தானம் வழங்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
கடுகு எண்ணெய் மற்றும் கருப்பு எள்ளை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ரிஷபம்
சனி பகவானின் அருளைப் பெற சனி ஜெயந்தி நாளில் சனி சாலிசாவை பாராயணம் செய்வதோடு, போர்வைகளையும் தானம் செய்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் ஏழைகளுக்கு கருப்பு நிற ஆடைகளை தானம் வழங்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கருப்பு உளுத்தம் பருப்பு, எண்ணெய் மற்றும் எள்ளு விதைகள் ஆகியவற்றை சனி ஜெயந்தி நாளன்று தானம் செய்வதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.
சிம்மம்
ஓம் வரேண்யாய நமஹ என்ற மந்திரத்தை சொல்வதோடு, நீலக்கல்லை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
கன்னி
மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருக சனி ஜெயந்தி நாளன்று ஏழைகளுக்கு காலணிகளை தானமாக வழங்குவது நல்லது.
துலாம்
கருப்பு நிற ஆடைகள் மற்றும் எண்ணெயை தானம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்
இரும்பு பொருட்களை சனி ஜெயந்தி நாளில் தானமாக வழங்க வேண்டும்.
தனுசு
சனிபகவானுக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடைகள் அல்லது மஞ்சளை தானம் செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் பசுவை தானம் செய்வது நற்பலனைத் தருவதாக கருதப்படுகிறது. ஆனால் பசுவை தானம் வழங்க முடியாவிட்டால், வெள்ளி பசுவை தானமாக வழங்கலாம்.
கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்த மக்கள் சனி பகவான் பிறந்த நாளான சனி ஜெயந்தி நாளன்று தங்கத்தை ஏழை மக்களுக்கு தானம் செய்வது மிகவும் நல்லது.
மீனம்
நெய், மஞ்சள் நிற ஆடைகள் அல்லது மஞ்சளை தானம் செய்தால் சனி பகவானின் அருளால் நற்பலன்களைப் பெறலாம்.