சீயான் விக்ரமின் தங்கலான் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான இயக்குனராவார். அடுத்தடுத்து பல வித்தியாசமான கதைக்கரு கொண்ட திரைப்படங்களான கபாலி, காலா, சார்பட்டா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
விக்ரமை வைத்து படம் இயக்கும் ரஞ்சித்!
இவர் அடுத்தது விக்ரமை வைத்து இயக்கும் படம் “தங்கலான்“. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மாஸான கெட் அப்போனது சஸ்பன்ஸை மேலும் அதிகரிக்க செய்கிறது.
இந்த திரைப்படத்தில் 'சியான்' விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மற்றும் பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் நடித்துள்ளனர்.
லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் தங்கலான்!
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ்.
இயக்குனர் பா.ரஞ்சித் இன்று முன்னதாக செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களிடம் பேசுகையில், “KGF படப்பிடிப்பை 55 நாட்கள் முடித்துவிட்டோம்.
இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. மே மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். இது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் மக்களால் விரும்பப்படும் திரைப்படமாக இருக்கும்.
நாங்கள் பெரும் கடின உழைப்பை செய்துள்ளோம். படத்தின் படப்பிடிப்பு எளிதானது அல்ல, பெரிய சவால்கள் இருந்தன. சவால்களை ஏற்று உழைத்தோம்.
பலர் எங்களுக்கு ஆதரவளித்தனர். ஒவ்வொரு தனிப்பட்ட தொழிலாளியும் படத்தைத் தயாரிப்பதில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, இது மக்களுக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்றாக இருக்கும்" என்றார்.
இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் படம்!
இதன் வெளியீடு குறித்து கேட்டபோது இயக்குனர் கூறினார். "படத்திற்கு மிகப்பெரிய VFX வேலைகள் இருப்பதால் இந்த ஆண்டு இறுதியில் இது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த செயல்முறை நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.