இந்த குணமுள்ள ஆணிடம்... CWC புகழ் குறித்த விமர்சனங்களுக்கு மனைவி கொடுத்த நெத்தியடி பதில்!
குக் வித் கோமாளி இறுதி எபிசோடில், புகழின் மனைவி பென்ஸி தனது மகளுடன் கலந்துகொண்டு புகழ் குறித்து வரும் விமர்சனங்களுக்கு கொடுத்துள்ள பதிலடி தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி
சின்னத்திரையில் மக்களின் மனங்கவர்ந்த நிகழ்சிகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்த நிகழ்சி தான் குக் வித் கோமாளி.
[2T050X ]
முதல் சீசன் ஆரம்பித்த நாள் முதல் 6 சீசன்களை கடந்தும் இந்நிகழ்ச்சி மீது மக்கள் மத்தில் இருக்கும் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதில் ராஜு டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஷபானா ரன்னர் அப் ஆக தேர்வானார்.
புகழ் மனைவி ஓபன் டாக்
இந்நிலையில், குக் வித் கோமாளியில் கடைசி எபிசோடில், புகழின் மனைவி பென்ஸி தனது மகளுடன் கலந்துகொண்டார்.
இதன் போது தனது கணவர் புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு மற்றும் அது குறித்த விமர்சனங்களுக்கு சரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், ஷோவை ஷோவாக பார்க்க வேண்டும், இதில் பிரச்சனை என்பது யாருக்கு என்றால் எனக்கும் அந்த பெண்ணுக்கும் தான். எனது கணவர் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், தவறான நோக்கத்துடன் பழகும் எந்த ஒரு ஆணிடமும் ஒரு பெண் பழக விரும்ப மாட்டாள்.
இந்த நிகழ்சி ஆரம்பித்தது முதல் இப்போது வரையில்அனைத்து பெண்களும் இவருடன் நட்பாக பழகி வருகின்றார்கள் என்றால், அவரின் குணம் எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |