சிங்கிள் பசங்க: மேடையில் குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா! வாயடைத்துப்போன ரசிகர்கள்
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுவரும் சீரியல் நடிகை ஆல்யா மானசா நிகழ்சியில் தர லேக்கலாக மாறி குத்தாட்டம் போட்ட காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
வித்தியாசமான பாணியில், வெற்றிநடை பேட்டுவரும் இந்நிகழ்சியில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கிள் பசங்க மேடையில் ஆல்யா மானசா தர லேக்கலாக குத்தாட்டம் போட்ட காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.