வெளியானது குக் வித் கோமாளி ப்ரோமோ: 3 சீசன்களிலும் நடக்காத ட்விஸ்ட்
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அதில் குக் வித் கோமாளியும் உள்ளடங்கும்.
இதில் சமையலுடன் சிரிப்புக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் வெற்றிகரமாக 3 சீசன்களைக் கடந்துவிட்ட குக் வித் கோமாளியானது, தற்போது 4 ஆவது சீசனிலும் பட்டையைக் கிளப்பி வருகின்றது.
இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் இம்யூனிட்டி வாங்கும் நபரே முதல் டொப் 5 போட்டியாளராக இருக்கப் போகின்றார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது அவ்வளவு இலகுவாக நடந்து விடாது. என்றும் நடுவர்களால் கூறப்படுகிறது. கடந்த 3 சீசன்களிலும் நடக்காத ஒரு நிகழ்வு இந்த சீசனில் நடக்கப் போவதாக கூறப்படுகிறது.
அவர்கள் கூறியதைக் கேட்ட குக் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் 50 நிமிடமும் குக் அனைவரும் அறிவுறுத்த கோமாளிகளே அந்த சமையலை முடிக்கவேண்டும் என்பதுதான் அந்த ட்விஸ்ட்.
இந்த விஷப் பரீட்சையைக் கடந்து யார் முதலில் டொப் 5 இற்குள் செல்லப் போகிறார் என்பது வரும் எபிசோடில் தான் தெரியும்.