மனைவிக்கு மரியாதை செய்யும் மதுரை முத்து- கோவிலை கண்டு கொண்டாடும் நெட்டிசன்கள்
மதுரை முத்து மறைந்த மனைவி லோகா மற்றும் பெற்றோருக்கு சொந்த ஊரில் கோவில் கட்டி வருவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளார்.
மதுரை முத்து
பிரபல தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் மதுரை முத்து.
“கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மதுரை தமிழில் யதார்த்தமான கவுண்டர்களை போட்டு இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அசத்தப்போவது யாரு, சண்டே காமெடி உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இன்னும் சில காமெடி நிகழ்களில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
அதில், “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் ஒரு குக்காக வந்து, பின்னர் நடுவராக மாறி, தற்போது கோமாளியாகவே மாற்றி விட்டார். அந்த தொலைக்காட்சியில் உள்ள இளம் காமெடியர்களுக்கு இவர் தான் முன்னுதாரணமாக இருக்கிறார்.
முதல் மனைவி உயிரிழந்த பின் மறுமணம்
Photo Album: கழுத்தில் புது தாலியுடன் ஜொலிக்கும் காளிதாஸ் மனைவி.. கூடி நின்று வாழ்த்தும் குடும்பத்தினர்
இதற்கிடையில், மதுரை முத்து லோகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
குழந்தை - குடும்பம் என மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் பொழுது கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் அவரின் மனைவி லோக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் ஆன பின்னர் மதுரை முத்து மனைவியின் தோழியான நீத்து என்கிற பல் மருத்துவரை மறுமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்தாண்டு சென்னையில் புதிய வீடு ஒன்றைக் கட்டி குடியேறிய மதுரை முத்து, மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
கோவில் கட்டும் மதுரை முத்து
இந்த நிலையில், தற்போது மதுரை முத்து அவரது முதல் மனைவி லோகவை நினைவு கூறும் வகையில் கோவில் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மறைந்த மனைவி லோகாவுக்கும், பெற்றோருக்கும் மதுரை முத்து கோயில் கட்டி வருவதை அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |